ஒரு கேலிச் சித்திரத்தைப்
போலத்தான்
வரைந்து பழகிக்
கொண்டேன் என் முகத்தை.
போலத்தான்
வரைந்து பழகிக்
கொண்டேன் என் முகத்தை.
நிஜத்திலும் அப்படித்தான்
இருக்குமென்பது
என் அனுமானமும் கூட
இருக்குமென்பது
என் அனுமானமும் கூட
அதன் காலப்பிரதிகளைத்தான்
உங்களின் ஒவ்வொருவரின்
கைகளிலும் தந்திருக்கிறேன்
உங்களின் ஒவ்வொருவரின்
கைகளிலும் தந்திருக்கிறேன்
உங்கள் ஒவ்வொருவரிடமும்
ஒவ்வொரு நான்
இருப்பது பெரும்
ஆச்சர்யமல்ல என்றாலும்
உங்கள் முன்
எப்போதும் சிரித்துக் கொண்டேவோ
அல்லது
உங்களைச் சிரிக்க வைத்தபடியோ
இருக்கும் அது
உண்மையில் என்
பிரதி முகம்தான்
என்பதை மட்டும் அறிக
ஒவ்வொரு நான்
இருப்பது பெரும்
ஆச்சர்யமல்ல என்றாலும்
உங்கள் முன்
எப்போதும் சிரித்துக் கொண்டேவோ
அல்லது
உங்களைச் சிரிக்க வைத்தபடியோ
இருக்கும் அது
உண்மையில் என்
பிரதி முகம்தான்
என்பதை மட்டும் அறிக
முகங்கள் ஆத்ம நண்பர்களுக்கானவை....முகமூடிகள் தான் முகவரிகள் இல்லையா! :) அருமை சகா!
பதிலளிநீக்குமிக்க நன்றியும் அன்பும் சகோ
நீக்குசிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமிக்க நன்றியும் அன்பும்
நீக்கு