வெள்ளி, 18 செப்டம்பர், 2015

நீலம் நிரம்பிய கோப்பை

ஒரு கோப்பை
ஞானத்தைப் பருகிக் கொண்டிருப்பதாகச்
சொல்கிறீர்கள்
ஒரு கோப்பை
தனிமை வலிக்கான மருந்தை
அருந்துவதாகப் பாசாங்கு செய்கிறீர்கள்
அதே கோப்பை
உற்சாகத்துக்கான
ஊக்கமருந்தெனவும் பறை சாற்றுகிறீர்கள்
துரோகத்தை மறக்கவும்
காதலைக் கொண்டாடவும்
காமத்தில் திளைக்கவும்
ஒரே நேரத்தில் எப்படி
ஒரே குவளை நேர் செய்கிறது ?
நானறிவேன் அது
மெல்லக் கொல்லும்
விஷமென்று.
நீங்களும் அறிந்திருப்பீர்கள் தானே..?

2 கருத்துகள்:

  1. ஒரு கோப்பையை ஞாயப்படுத்தும் இளைஞர்களுக்கு மத்தியில், அதில் மதுவை வெளியேற்றி மனிதம் நிரப்பும் தங்களின் வரிகள் எதிர்கால இந்தியாவின் நிலை குறித்த என் ஆசிரிய மனதின் வலி குறைகிறது. நன்றி சகா:)

    பதிலளிநீக்கு