புதன், 13 ஜூன், 2018

த.மு.எ.க.ச கோவை மாவட்ட மாநாடு


கடந்த ஞாயிறு கோவையில் த.மு.எ.க.ச மாவட்ட மாநாடு நடைபெற்றது.
அதில், கோவை  படைப்பாளர்களுக்கும், கோவை மாவட்டத்தில் விருது பெற்ற படைப்பாளர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

எனது ஆதி முகத்தின் காலப்பிரதி நூலுக்கு மூன்று விருதுகள் பெற்றமைக்காக என்னையும் சிறப்பு செய்தார்கள்.




நிகழ்வு காலையில், தூத்துக்குடி படுகொலைக்கு எதிரான கண்டனத் தீர்மானத்துடனும் , கையெழுத்து இயக்கத்துடனும் துவங்கியது. பின்பு நிமிர்வு குழுவினரின் அதிரும்  பறை இசையுடன் ஆரம்பமானது.



பொள்ளாச்சி இலக்கிய வட்டப் படைப்பாளர்கள் க.அம்சப்ரியா, சோலைமாயவன், பொள்ளாச்சி அபி, ச.ப்ரியா, வே.கோகிலா, கோவை சசிக்குமார், கீதாப்ரகாஷ் உள்ளிட்ட கோவையின் பல்வேறு எழுத்து ஆளுமைகளுக்கும் சிறப்பு செய்யப்பட்டது








கவிஞர் முத்துநிலவன் அவர்களின் சிறப்புரை , நிகழ்வின் முத்தாய்ப்பு உரை.

பின்பும் கலை நிகழ்வுகளும் பல்வேறு நிகழ்வுகளும் அந்த நாளை நிறைத்தன.
அறிமுகப் படைப்பாளர் முதற்கொண்டு மூத்த படைப்பாளர்கள் வரையிலும் ஒருவர் விடாது அனைவரையும் த.மு.எ.க.ச சிறப்பு செய்தது. தொடர் செயல்பாடுகளின் மூலம் த.மு.எ.க.ச தனித்த இடத்தில் எப்போதும் உயர்ந்து நிற்கிறது.


1 கருத்து:

  1. விழா நிகழ்வுப் பகிர்வு அருமை. சிறப்பு செய்யப்பட்டமை அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு