வாட்சப்பில் வந்த ஒரு வீடியோ மூலமாக சிறுமி அனன்யாவின் பேச்சை ரசித்து அவளுடைய முழு நேர்காணலை யூ டியூபில் தேடிப் பார்த்தேன். விழிகள் விரிந்து, மனம் உறைந்து பார்த்துக்கொண்டேயிருக்கிறேன். இவள் தெய்வக் குழந்தை. கடவுள் கவிதை எழுதினால் இப்படித்தான் இருக்கும். தமிழ் இனி மெல்லச் சாகும் என எந்தப் பேதையும் உரைத்திட வாய்ப்பில்லை இவள் போலும் தமிழ்க் குழந்தைகள் இருக்க ... நண்பர்கள் அவசியம் காணலாம் மொழியையும் கவிதையையும் இவள் அவ்வளவு அழகாக உள்வாங்கி வெளிப்படுத்துகிறாள்.
மரபுக்கவிதையை, இலக்கியத்தை, புதுக்கவிதையை, ஹைக்கூவை, தமிழை அவ்வளவு அழகாகப் புரிந்துகொண்டுள்ளாள். தன் வயதொத்த சிறுமி ஆஷிபாவுக்கு அவள் எழுதியிருக்கும் இரங்கல் கவிதை அவளது உணர்வையும் ஆளுமையையும் உணர்த்துகிறது. https://www.youtube.com/watch?v=Iay1WrzaGBk
அன்புடன் இரா.பூபாலன்
நானும் பார்த்திருக்கேன். நல்ல உச்சரிப்பு.
பதிலளிநீக்குதமிழ் மீது காதல் கொண்டு
பதிலளிநீக்குமழலை கற்றறிந்த பாவண்ணம்
பலரின் உள்ளத்தில் மாற்றம் தரும்!
மழலைக்கு பாராட்டுகள்!
உச்சரிப்பினை ரசித்தேன்.
பதிலளிநீக்கு