வியாழன், 8 மார்ச், 2018

சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்





ஒரு பாதி நிலம்
ஒரு பாதி நீர்
ஒரு பாதி ஆகாயம்
ஒரு பாதி காற்று 
ஒரு பாதி நெருப்பு  என
நம்மின் பஞ்ச பூதங்களிலும்
சரி பாதி அவள்

அவளின் இயக்குதலில் 
அவளைப் பற்றிச் சுழன்றபடியிருக்கிறது நம் பூமி

எப்போதாவது அவளுக்கு ஒரு துணை தேவை
எப்போதாவது அவளுக்கு ஒரு விரல் தேவை
எப்போதாவது அவளுக்கு ஒரு தோள் தேவை
எப்போதாவது அவளுக்கு ஒரு சொல் தேவை
எப்போதாவது அவளுக்கு ஒரு 

அப்போது மட்டும் அவளுக்கான நம்மைக் கொடுப்போம்
மற்றபடி அவள்
தனியள்

மகளிர் தின வாழ்த்துகள்






6 கருத்துகள்:

  1. ரொம்ப நல்ல கவிதை அண்ணா... அந்த எப்பொழுதாவது என்ற வார்த்தையும் அதற்கான அர்த்தமும் தான் இங்கு பலருக்கும் புரிய வேண்டி இருக்கிறது... இத்தகைய கவிதை ஒரு ஆணிடமிருந்து வருவதில் பெருமகிழ்ச்சி....

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. இன்னிக்குதான் பார்த்தேன். வாழ்த்துகளுக்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  4. ஆணுடன் பெண் ஒன்றாக இருக்கிறாள்! உடனாய் இருக்கிறாள்!! வேறாய் இருக்கிறாள்!!!

    பதிலளிநீக்கு
  5. அருமையான வரிகள்

    தங்கள் கவிதை ஒன்றினை விரைவில் வெளியிடவுள்ள எனது மின்நூலுக்கு அனுப்பிவையுங்கள். விபரமறிய...
    https://seebooks4u.blogspot.com/2018/01/2018-2.html

    பதிலளிநீக்கு