புதன், 19 ஆகஸ்ட், 2015

மிக முக்கியமான அறிவிப்பு : மிக்க மகிழ்ச்சியானதும் கூட ...


தமிழ்க் கவிதை உலகில் மிகமுக்கியமான சிற்றிதழாக பொள்ளாச்சி -ஆனைமலையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த புன்னகை இதழ் 73 ஆவது இதழோடு பொருளாதார நெருக்கடி காரணமாக நின்று விட்டது. புன்னகையை மீண்டும் துவங்கச் சொல்லி நான் உட்பட நண்பர்களும் , எழுத்தாளர்களும், வாசகர்களும் கேட்டுக்கொண்டே இருந்தோம். பொருளாதார உதவியை நண்பர்கள் இணைந்து செய்வதாக முடிவானதும், விரைவில் 74ஆவது இதழைக் கொண்டு வருகிறோம்.

புன்னகையின் ஆசிரியர் குழு பின் வருமாறு.

ஆசிரியர் குழு :
செ.இரமேஷ்குமார்
க.அம்சப்ரியா
இணை ஆசிரியர் :
இரா.பூபாலன்
ஆலோசனைக்குழு :
சோலை மாயவன்
புன்னகை பூ ஜெயக்குமார்

ஆக வெகு விரைவில் தரமான நல்ல கவிதைகளுடன் புன்னகை கவிதை இதழ் மீண்டும் தனது பயணத்தைத் துவங்க உள்ளது என்பதை உற்சாகத்துடன் அறிவிக்கிறோம்.. புன்னகை தொடர்ந்து வெளிவர உதவுவோம்.
கவிஞர்களே விரைவில் தங்களது கவிதைகளை கீழ்க்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் ..

punnagaikavidhai@gmail.com

மேலும் ஒரு இனிய செய்தி, 2013 ல் புன்னகை இலக்கிய விருது அறிவிக்கப்பட்டு கண்மணிராசா, நிலாரசிகன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதுவும் 2014ம் ஆண்டு வழங்கப்படவில்லை. பொள்ளாச்சி இலக்கிய வட்டத்துக்கு வரும் பல்வேறு படைப்பாளர்களும் தொடர்ந்து இது பற்றிக் கேட்டுக் கொண்டே இருந்தனர். இன்று அதுவும் முடிவு செய்யப்பட்டது. பொள்ளாச்சி இலக்கியவட்டம் மற்றும் புன்னகை இணைந்து வழங்கும் கவிதைகளுக்கான இலக்கிய விருது இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் என்பதையும் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் ..
இதற்கான முழுமையான அறிவிப்பு விரைவில் …

டொய்ங்....

4 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் பூபாலன். வழக்கம் போல சந்தா செலுத்த தாயாகி விட்டேன். விபரம் அனுப்புங்கள். - கிருஷ்.இராமதாஸ், துபாய் [பெரம்பலூர்].

    பதிலளிநீக்கு
  2. முயற்சி திருவினையாக்கும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு