வணக்கம் நண்பர்களே,
கொலுசு முதல் இதழ் வெளியாகிவிட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இணைய இதழாக மட்டுமல்லாது மின் இதழாகவும்.
கொலுசு இணையதளத்தைப் பார்வையிட, கீழ்க்காணும் சுட்டியில் நுழையுங்கள்
புதிய உறுப்பினர்கள் இங்கு தங்களது மின்னஞ்சலைப் பதிவுசெய்து கொண்டால், தங்களது மின்னஞ்சலுக்கு ஒரு சுட்டி வரும், அதைத் தொடர்ந்தால் போதும். பதிவாகிவிடும். பதிவுசெய்தால் மட்டுமே பின்னூட்டம் அளிக்க இயலும்.
படைப்புகள் அனுப்பி இருப்பவர்கள், தங்களது மின்னஞ்சல் ஏற்கெனவே பதிவாகிவிட்டதால், நுழை என்ற பகுதியில் சென்று
பயனர் பெயராக தங்கள் மின்னஞ்சல் முகவரியையும்
கடவுச்சொல்லாக password என்றும் தட்டினால் போதும்... நுழையலாம்.
நண்பர்கள் , இதழில் உள்ள படைப்புகளை வாசித்துவிட்டுப் பின்னூட்டமிடவும். தங்களது விமர்சனங்களைப் பதியவும்.
மேலும், ஆகஸ்ட் மாத இதழை மின்னிதழாக படவடிவக் ( PDF ) கோப்பாக பதிவிறக்கி, பின் வாசிக்க கீழ்க்காணும் சுட்டியைத் தட்டுங்கள்
இது மட்டுமல்லாது கைபேசியில் வாசிக்கவென ஒரு வடிவத்தில் அளிக்கிறோம், அதைத் தரவிறக்க
மின்புத்தகமாக ( E-Book ) தரவிறக்க
இதழை வாசித்துவிட்டு தங்களது மேலான கருத்துகளைப் பகிருங்கள்.
அடுத்த இதழுக்கான படைப்புகளை அனுப்ப kolusu.in@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உடனடியாக படைப்புகளை அனுப்பி வையுங்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக