புதன், 23 அக்டோபர், 2019

மரப்பாச்சியின் கனவுகள்

கடந்த 13.10.2019 அன்று கவிஞர் யாழினிஸ்ரீ அவர்களின் மரப்பாச்சியின் கனவுகள் நூல் வெளியீட்டு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.நானும் கவிஞர் சோலைமாயவன் அவர்களும் சென்றிருந்தோம்.

யாழினிஸ்ரீ  பத்து வயதுவரை எல்லா குழந்தைகளும்போல இயல்பாகத் தான் இருந்தார். பத்து வயதில் ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் உடல் முழுவதும் செயலற்றுப்போனது. நடக்க இயலாது. சக்கரநாற்காலி தான். அவரது அம்மா தான் யாழினியின் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறார் கழுத்தைக் கூட அசைக்க முடியாது. இந்தச் சவால்களுக்கிடையில் கவிதைகள் எழுதி அதைத் தொகுப்பாக வெளியிடுவது மிகப்பெரிய சவால்.

கவிஞர் குட்டிரேவதி சென்னையிலிருந்து வந்திருந்து நூல் வெளியிட்டு அழகான வாழ்த்துரையை வழங்கினார். நூல் குறித்த வாசகப் பார்வையை நிஷா வழங்க, கவிஞர் யாழியும் நானும் வாழ்த்துரை வழங்கினோம். இந்த நூலை சிறப்பாக வெளிக் கொண்டு வந்த ஜீவாவும் பேசினார். நிகழ்வை கவிஞர் தனசக்தி ஒருங்கிணைத்தார். பொன்னுலகம் குணா நன்றியுரை வழங்கினார்.




ஒரு புத்தகத்தை விலை கொடுத்து வாங்கி வாசிப்பதும், வாசிப்பவர்களுக்குப் பரிசளிப்பதும் மிகச் சிறந்த செயல். அதிலும் யாழினிஸ்ரீ போன்றோரின் முயற்சிகளை ஊக்குவிப்பதும் மிக முக்கியமானது. அதன் பொருட்டு யாழினியின் மரப்பாச்சியின் கனவுகள்  தொகுப்பை நண்பர்கள் தயவு செய்து வாங்கி வாசியுங்கள் …

நூல் குறித்த வாசிப்பனுபவம் விரிவாக எழுதுகிறேன்

புத்தகத்தின் விலை ரூ.50/-

தொடர்பு கொள்ள வேணடிய அலை பேசி எண்கள்
70104 84465 , 88707 33434,
80569 72399, 97152 89560

கவிஞர் குட்டி ரேவதி நூல் வெளியீட்டுக்குப் பிறகு யாழினிஸ்ரீயைப் பற்றி எழுதியிருக்கிறார் அதை வாசிக்க கீழே சொடுக்கவும்


யாழினிஸ்ரீயின் நேர்காணல் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது அதை வாசிக்க கீழே சொடுக்கலாம்

4 கருத்துகள்:

  1. இன்னும் தொடர்ந்து பயணிக்க அவருக்கு என் அன்பு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. கவிதை என்பதே மனசின் மென் பக்கங்களில் பதிந்த மலர்மென்மை எண்ணங்கள்தானே சகோ..வாழ்த்துகள் சகோதரி..இன்னமும் பல கனவுகள் இது போல நிசமாக வாழ்த்துகள்..நன்றியுடன் பாசமும்

    பதிலளிநீக்கு