காவிரி விவகாரம் தொடர்பாக பல்வேறு வகையில் நம் மக்கள் போராடி வருகின்றனர். சிம்புவின் ஒரு யோசனையை ஏற்று சில கர்நாடக தோழர்கள் தமிழர்களுக்கு ஒரு குவளை நீர் அளித்து அன்பையும் சகோதரத்துவத்தையும் பரிமாறிக் கொள்ளும் காட்சி சற்றே மன நிறைவு தருகிறது.
சமயங்களில் சிம்பு பேசுவது டி.ஆர் பேசுவது போல ஒரு வித சலிப்பைத் தரும். ஆனால் இம்முறை இந்த யோசனையை அவர் சொல்லும் போதே நெகிழ்ச்சியாக இருந்தது. அதற்கான பலன் மக்களிடம் இருந்து கிடைத்திருக்கிறது என்பது மகிழ்வு.
சிம்புவுக்கு நன்றி. பல்வேறு முனைகளிலும் தொடரட்டும் போராட்டம்.
ஆனால் இந்தக் காணொலி பதிவிட்ட OneIndia Tamil க்கு எனது வன்மையான கண்டனங்கள்.
சிம்புவின் யோசனையைப் பாராட்டுவது சரிதான். ஆனால் ... உண்ணாவிரதம் , செருப்பு வீசுவது போன்றவை வெட்டியான போராட்டம் என்று சொல்வதை வன்மையுடன் கண்டிக்கிறேன்.
போராட்டம் என்றால் போராட்டம் தான். எவ்வகையில் ஆனாலும்.
வீடியோ காண :
அற்புதம்
பதிலளிநீக்குNice na
பதிலளிநீக்குதங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!
சிறப்பான பதிவு.
பதிலளிநீக்குமிகவும் நன்று ...
For Tamil News Visit..
https://www.maalaimalar.com/ | https://www.dailythanthi.com/