இன்றைக்கு எங்களின் நிறம் கருப்பு
வண்ணமயமான வாழ்க்கை உங்களது
துளி நீருக்கும் உணவுக்கும் உயிருக்கும் உடமைக்கும்
போராடிப் போராடி
மல்லுக்கட்டிக் கொண்டே இருக்கும்
எங்களின் வாழ்வின் நிறம் இதுதான்.
எப்போதுமே
இந்த தேசம் கையேந்திக் கொண்டிருக்கிறது
ரூபாய் நோட்டுகளுக்காக
தண்ணீருக்காக
அடிப்படை உரிமைகளுக்காக
பெண்களின் பாதுகாப்புக்காக
எங்கள் வயல்களுக்காக
எங்கள் நெல்மணிகளுக்காக
எங்கள் கல்விக்காக
எங்கள் மொழிக்காக
அடப் போங்க அரசரே
இன்னும் இந்த தேசம்
வளர்ச்சிப் பாதையில்
பயணிப்பதாக அப்பாவியாக
கூவுகிறீர்கள் மேடைகள் தோறும்...
வீதிக்கு வந்து விட்டோம்.
அணி அணியாக...
எங்களின் இன்றைய வண்ணம் கருப்பு
கருப்பு போராட்டத்தின் நிறம்
கருப்பு துயரத்தின் நிறம்
எங்களின் துயரம் யாதெனில்
இன்றைக்கு மட்டுமல்லாது
உங்கள் பொற்குடையின் கீழ்
எல்லா நாட்களுக்கும்
எங்களின் நிறம்
கருப்பாகவே இருப்பது தான்.
வண்ணமயமான வாழ்க்கை உங்களது
துளி நீருக்கும் உணவுக்கும் உயிருக்கும் உடமைக்கும்
போராடிப் போராடி
மல்லுக்கட்டிக் கொண்டே இருக்கும்
எங்களின் வாழ்வின் நிறம் இதுதான்.
எப்போதுமே
இந்த தேசம் கையேந்திக் கொண்டிருக்கிறது
ரூபாய் நோட்டுகளுக்காக
தண்ணீருக்காக
அடிப்படை உரிமைகளுக்காக
பெண்களின் பாதுகாப்புக்காக
எங்கள் வயல்களுக்காக
எங்கள் நெல்மணிகளுக்காக
எங்கள் கல்விக்காக
எங்கள் மொழிக்காக
அடப் போங்க அரசரே
இன்னும் இந்த தேசம்
வளர்ச்சிப் பாதையில்
பயணிப்பதாக அப்பாவியாக
கூவுகிறீர்கள் மேடைகள் தோறும்...
வீதிக்கு வந்து விட்டோம்.
அணி அணியாக...
எங்களின் இன்றைய வண்ணம் கருப்பு
கருப்பு போராட்டத்தின் நிறம்
கருப்பு துயரத்தின் நிறம்
எங்களின் துயரம் யாதெனில்
இன்றைக்கு மட்டுமல்லாது
உங்கள் பொற்குடையின் கீழ்
எல்லா நாட்களுக்கும்
எங்களின் நிறம்
கருப்பாகவே இருப்பது தான்.
இத்தனை நாள் அமங்கலத்தின் குறியீடு,
பதிலளிநீக்குஇனி,
மறுமலர்ச்சியின் குறியீடு.
செம்மை
பதிலளிநீக்கு