பல்லடம் கண்ணம்மாள் நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் சுப்ரமணியம் அய்யா அவர்கள் தீவிர வாசகர். பல்வேறு எழுத்து ஆளுமைகளுடனும் நட்பைப் பேணுபவர். ஆங்கில வழிப் பள்ளி நடத்தினாலும் தமது மாணவர்களுக்கு தமிழ்ப்பற்றை தொடர்ந்து ஊட்டி வருபவர். அவரது தலைமையில், அவரது பேத்தியும் பள்ளியின் நிர்வாக அறங்காவலருமான செல்வி அபராஜிதா பள்ளியைத் திறம்பட நடத்தி வருகிறார்கள்.
தோழி கவிஞர் செமிழியின் மூலமாக அவர்களது அறிமுகம் கிடைத்தது. பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் குழந்தைகள் கலைக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சுப்ரமணியம் அய்யா அவர்கள் தொகுத்த பாலும் தெளிதேனும் எனும் நீதி நூல் தொகுப்பு அன்பளிப்பாக அளித்தார்கள்.
பள்ளியில் தமிழ் மன்றம் துவங்க வேண்டும் அதைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பது அவர்களது விருப்பம். கடந்த 19.08.2017 அன்று தழல் பாரதி ஜெயகாந்தன் இலக்கிய மன்றம் என்ற பெயரில் பள்ளியில் இலக்கிய மன்றம் துவங்கப்பட்டது.
பள்ளியின் இலக்கிய மன்றத்துக்கு என்னைத் தலைவராகவும் கவிஞர் செமிழியை செயலாளராகவும் நியமித்திருக்கிறார்கள்.
அன்றைய நிகழ்வின் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களும் , விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் அய்யா அவர்களும் வந்திருந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.
நிகழ்வுக்காக , பள்ளிக்குள் நுழையும் போதே பிரம்மாண்ட ஏற்பாட்டோடு வரவேற்பு காத்திருந்தது. மாணவர்கள் அணிவகுத்து நின்று வரவேற்றனர். ஒவ்வொருவரும் எங்களைப் பார்த்து வணக்கம் வாழ்க வளமுடன் என்று சொல்லி வரவேற்றது புதுமையாகவும் நெகிழ்வாகவும் இருந்தது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு துவங்க, சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கு ஏற்றினர், சிறப்பு விருந்தினர்க்குச் பொன்னாடை அணிந்து மரியாதை செய்யப்பட்டது.
நிகழ்வின் சிறப்புரையில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் பாரதியையும் ஜெயகாந்தனையும் மிகச்சிறப்பாக மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். பாரதி ஏன் இன்றைக்குமான மகாகவி என்பதற்கான சான்றுகளை அவரது நெருப்பு வரிகளை முன்வைத்து உரை நிகழ்த்தினார்.
திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்கமலைகள் உடைந்து -வெள்ளம்
பாயுது பாயுது பாயுது - தாம்தரிகிட
தக்கத் ததுங்கிட தித்தோம் - அண்டம்
சாயுது சாயுது சாயுது - பேய் கொண்டு
தக்கை யடிக்குது காற்று - தக்கத்
தாம் தரிகிட தாம் தரிகிட தாம் தரிகிட தாம் தரிகிட
வெட்டியடிக்குது மின்னல் - கடல்
வீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம் -கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய - மழை
எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா!
பாரதியின் இந்த வரிகளை என்ன குரலில் எவ்வாறு வாசிக்க வேண்டும் என அவர் சொல்லிய விதம் மெய்சிலிர்க்க வைத்தது. அவ்வாறு வாசிக்கச் சொல்லித்தான் தனது தமிழ் ஆசிரியர் சொல்லித் தந்ததாக சொன்னார்.
ஜெயகாந்தன் ஏன் எழுத்தாளர்களில் ஒரு சிங்கத்தைப் போல மதிக்கப்பட்டார் என்பதற்கான அவரது வாழ்வில் நடந்த சில சம்பவங்களின் மூலமாக சிறப்பாக எடுத்துரைத்தார். பாரதியையும் ஜெயகாந்தனையும் தெரிந்திருந்தாலும் தெரியாமல் இருந்திருந்தாலும் இந்த உரை நிச்சயம் ஒரு திறப்பு. இதன் வாயிலாக நல்ல மாணவர்கள் பாரதியையும் ஜெயகாந்தனையும் தேடி வாசிப்பார்கள்.
வேலாயுதம் அய்யா அவர்கள் தமது சுருக்கமான வாழ்த்துரையில் மாணவர்களின் வாசிப்பு பற்றியும் புத்தகங்கள் குறித்தும் உரையாற்றினார். பள்ளியின் நூலகத்தில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் இருக்கின்றன அதில் ஒரு ஆண்டில் எந்த மாணவர் நிறைய புத்தகங்கள் எடுத்து வாசிக்கின்றாரோ அவருக்கான ஒரு சிறப்புப் பரிசை வழங்குவதாக அறிவித்தார்.
எனது உரையில், தழல் என்ற அமைப்பின் அவசியத்தையும், அதன் நோக்கத்தையும் எடுத்துக்கூறியதோடு, வாசிப்பின் அவசியத்தையும் அது தரும் இன்பத்தையும் சொன்னேன்.
கவிஞர் செமிழி, சூழலியல் விழிப்புணர்வு ஏற்படும் விதமாக காஸ்டிக் சோடா தயாரிப்பு நிறுவனத்தின் தீமையை, அது தரும் பாதிப்புகளை எடுத்துரைத்து மாணவர்களுக்கு சமூகம் சார்ந்த விழிப்புணர்வும் அக்கறையும் இருத்தல் வேண்டும் என வலியுறுத்தினார்.
மாணவிகளின் பரதம், தமிழின் வரலாற்றையும் பெருமையையும் எடுத்துரைத்த மாணவி ரக்ஷனாவின் அழகிய தமிழ் உரை, மாணவர்களின் யோகா கலை நிகழ்வு என ஒரு பரிபூர்ண நிகழ்வாக இருந்தது. நிகழ்வைத் தொகுத்தளித்த தமிழாசிரியை ஷர்மிளா அவர்களின் தமிழும் உச்சரிப்பும் சிறப்பாக இருந்தது.
துவக்கம் சிறப்பாக இருக்கிறது இனி தொடர்ந்து செயல்பாடுகளின் மூலம் நிறைய மாணவர்களை . தமிழ் உணர்வாளர்களாகவும், பேச்சாளர்,எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளராகவும் வடிவமைக்க வேண்டும்.
அருமையான நிகழ்சித் தொகுப்பு
பதிலளிநீக்குநகைச்சுவை எண்ணங்கள் சில...
http://www.ypvnpubs.com/2017/08/blog-post_22.html
மிக்க மகிழ்ச்சி. நன்றியும் அன்பும் அய்யா
நீக்குஇலக்கிய மன்றத் துவக்க விழா நிகழ்வுப் பகிர்வு கண்டேன். மன்றம் மென்மேலும் வளர மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி. நன்றியும் அன்பும் அய்யா
நீக்குஅருமையான பதிவு பாராட்டுகள்
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி. நன்றியும் அன்பும்
நீக்குபள்ளியில் நடக்கும் விடுதி விழாவுக்கு வரவேற்புரை நிகழ்த்தும் முன்பு வரவேற்று பேச்சு தொகுப்பு இருந்தால் அனுப்பவும் அய்யா என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் அய்யா
நீக்குபள்ளியில் நடக்கும் விடுதி விழாவுக்கு வரவேற்புரை நிகழ்த்தும் முன்பு வரவேற்று பேச்சு தொகுப்பு இருந்தால் அனுப்பவும் அய்யா என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் அய்யா
நீக்குதொடர்ந்து தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி. நன்றியும் அன்பும்
நீக்குநல்லதொரு விழாப்பகிர்வு..தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்ழ்த்துகள்....
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி. நன்றியும் அன்பும்
நீக்குமனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி. நன்றியும் அன்பும்
நீக்குமரியாதைக்குரிய ஐயா,வணக்கமும்,வாழ்த்துக்களும்!
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி. நன்றியும் அன்பும் அய்யா
நீக்குசூப்பர்ப். செறிவான பணி சிறக்கட்டும் நண்ப
பதிலளிநீக்குப்ரியங்கள் அகராதி
நீக்குவாழ்த்துக்கள் அண்ணா வளர்க உங்கள் தமிழ்ப் பணி
பதிலளிநீக்குமகிழ்ச்சி ஆனந்தி
நீக்குSimply superb
பதிலளிநீக்குமிக்க நன்றி
நீக்குவாழ்த்துக்கள் தொடரட்டும் தமிழ்பணி
பதிலளிநீக்குமிக்க நன்றி
நீக்குமிக்க மகிழ்ச்சி
பதிலளிநீக்குஅருமை வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதமிழ் இலக்கியப் பணி தொடர்ந்து நடந்திட வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு