செவ்வாய், 20 அக்டோபர், 2015

ஞானசேகரனைக் கொத்தித் தின்னும் ஞானசேகரன்



ஞானசேகரன் செத்து
பதினாறாம் நாள் காரியத்தில்
படையலிட்டிருந்தார்கள்.
அவனே காகமாகி வந்து
முதல் பருக்கையைத் தின்றால் தான்
தின்பதாகக் காத்திருந்தோம்.
உச்சந்தலையில் அடிபட்டு
புண்ணோடு வந்த காகம்
முதல் பருக்கையைக் கொத்த
ஞானசேகரனே வந்துவிட்டானென
கண்ணீர் கோர்க்க சிலாகித்தனர்.
விபத்தில் அடிபட்டு
இறந்து போனவனின்
உடல் திசுக்களை
தார்ச்சாலையில் இதே காகம்
கொத்திக் கொண்டிருந்ததை
நான் பார்த்தேன்.

1 கருத்து:

  1. உங்களுடைய எழுத்துகள் நன்றாக உள்ளது. தனக்கே உரிய தரத்தை கொண்டுள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு