வியாழன், 16 ஆகஸ்ட், 2018

கேரளத்துக்கு கரம் சேர்ப்போம்

நண்பர்களுக்கு வணக்கம்

நமது அண்டை மாநிலம் கேராளா பெருவெள்ளத்தில் மூழ்கித் தத்தளித்தபடி இருக்கிறது. நாம் கரம் சேர்க்க வேண்டிய தருணம் இது. சென்னை கடலூர் வெள்ளத்தின் போது பொள்ளாச்சி இலக்கிய வட்டம் மூலம் 3 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புடைய உணவுப் பொருட்கள் உடைகளை வழங்கினோம். சென்னை வெள்ளத்தின் போது நமது கேரள சகோதரர்களும் நமக்குச் செய்த உதவியை நாம் மறக்கக் கூடாது. நாம் பணமாக, பொருளாக, அன்பாக, ஆதரவாக அவர்களுக்கு எவ்வகையிலேனும் உதவ வேண்டும்.

பொள்ளாச்சி நண்பர் ஆன்மன் கேரள முகாமில் இருந்தபடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்கள் திரட்டி உதவும் பெரும் பணியைச் செய்துவருகிறார். பொள்ளாச்சியில் கீதா ப்ரகாஷ், எதிர் வெளியீடு அனுஷ் போன்றோரும் திரட்டி வருகின்றனர்.

எனவே

வரும் ஞாயிறு நமது பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 64ஆவது சந்திப்பு நிகழ்ச்சி என்பது முன்னர் திட்டமிடப்பட்ட நிகழ்வுகளுடன் மறைந்த தலைவர்கள் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் அடல் பிகாரி வாஜ்பாயி அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாகவும் கேரள சகோதரர்களுக்கான உதவிப் பொருட்களைத் திரட்டும் முகாமாகவும் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்...

வரும் ஞாயிறு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாங்கள் தங்களாலான உணவுப் பொருட்கள், புதிய உடைகள் ( பழையதைத் தவிர்க்கவும் ), மருந்துப் பொருட்கள், பாக்கெட் உணவுகள் என தங்களால் ஆன பொருட்களைக் கொண்டு வந்து தரலாம். பணமாகத் தருபவர்களும் தரலாம் அவற்றை பத்திரமாக நண்பர்கள் மூலம் நேரடியாக பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்குக்  கொண்டு சேர்க்கப்படும்.

தொடர்புக்கு

க.அம்சப்ரியா 9095507547
இரா.பூபாலன் 98422 75662

சோலைமாயவன்,  புன்னகை பூ ஜெயக்குமார்,  ச.தி.செந்தில்குமார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக