இவ்வளவு எதிர்மறையாக என்றுமே நான் எழுதியதாக நினைவில் இல்லை. ஆனால், இந்த உலகம் கேடு கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது, சீரழிந்து கொண்டிருக்கிறது என்று மட்டுமே நினைக்கத் தோன்றுகிறது இந்தச் செய்தியைப் படித்தவுடன்..
சென்னை அயனாவரத்தில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் 11 வயதான சிறுமி சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படிக்கிறார்.
வாய் பேசும், காது கேட்கும் திறன் குறைபாடு உள்ள அந்த மாணவி, தினந்தோறும் தனது வீட்டுக்கும், பள்ளிக்கும் செல்லும்போது குடியிருப்பில் உள்ள லிப்டை பயன்படுத்துவார். ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்களோடு அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அனைவரிடமும் வெகுளித்தனமாக அந்தச் சிறுமி பேசுவாராம்.
இதைப் பயன்படுத்தி ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்கள் 4 பேர் முதலில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ‘விஷயத்தை வெளியில் சொன்னால் உன்னைத் தீர்த்துக்கட்டிவிடுவோம்’, என்று கத்தியைக் காட்டி மிரட்டியதால் அந்தச் சிறுமியும் விஷயத்தை வெளியே சொல்ல பயந்து அமைதியாக இருந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்
முதலில் அந்த 4 காமக் கொடூரன்களின் இச்சைக்கு பலியான அந்தச் சிறுமி, அடுத்தடுத்து அடுக்குமாடிக் குடியிருப்பில் காவல் பணிக்கு வரும் மேலும் 5 காவலாளிகளின் காமப்பசிக்கு இரையாக்கப்பட்டு இருக்கிறாள். அக்குடியிருப்பின் மொட்டை மாடி பகுதியிலும், ‘லிப்ட்’டுக்குள் வைத்தும் இந்த காமக் கொடூரர்கள் அந்த சிறுமியை தங்கள் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். அத்தோடு விடாமல் அக்குடியிருப்புக்கு பல்வேறு வேலைகளுக்காக வந்த பிளம்பர்கள், எலெக்ட்ரீசியன்கள் என்று மொத்தம் 22 பேர் கடந்த 7 மாதங்களாக ஒவ்வொருவராக தங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.
கேட்கவே உடல் நடுங்குறது. ஒரு 11 வயது சிறுமியை 23 வயது முதல் 60 வயது வரை உள்ள 22 ஆண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியிருப்பது மிகுந்த பதற்றத்தையும், அச்சத்தையும், பெரும் கோபத்தையும் வரவழைக்கிறது.. 22 பேரில் 17 பேரை இப்போது கைது செய்திருக்கிறார்கள்.
இவர்களை என்ன செய்வது ?????
பிடிபட்ட குற்றவாளிகளின் படம் இதோ ..

இவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க வேண்டும். இந்த வழக்கில் கிடைக்கும் தண்டனை ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
இந்தக் கொடுமையை தனது பெற்றோரிடம் சொல்லத் தயங்கியிருந்த சிறுமி, வெளிமாநிலத்தில் தங்கி படித்துக்கொண்டிருந்த தனது மூத்த சகோதரி விடுமுறையில் வீட்டுக்கு வந்த போது அவரிடம் சொல்லி அழுதிருக்கிறார். அதன் பின்னர் தான் இந்தக் கொடுமை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
அந்தச் சிறுமி தனக்கு நேர்ந்த இந்தக் கொடுமையை ஏன் பெற்றோரிடம் உடனே சொல்லவில்லை, குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையில் ஏதோ ஒரு இடைவெளி இருக்கிறதல்லவா ? பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே இருக்கும் இந்த இடைவெளி நவீன காலச் சூழலில் அதிகரித்துக் கொண்டே போவது மிகுந்த ஆபத்தை விளைவிக்கும். சரியோ தவறோ எதுவாக இருப்பினும் பெற்றோரிடம் பகிர வேண்டும், அதற்கான இடத்தையும் நேரத்தையும் பெற்றோர் அல்லவா தரவேண்டும். நாம் அதைத் தருவதில்லை.
இந்த நிலையை நாம் களைய வேண்டும்.. தினமும் சிறிது நேரம் நம் பிள்ளைகளுடன், பெற்றோர்களாக அல்லாது நண்பர்களாக உரையாட வேண்டும். அவர்கள் அன்றாடம் சிறு செயல்களில் விளையும் சிறு சிறு வெற்றிகளைப் பாராட்ட வேண்டும், சிறு சறுக்கல்களுக்கு அவர்களைப் பக்குவப்படுத்த வேண்டும்.
நல்ல தொடுகை, கெட்ட தொடுகையைக் கற்றுத் தருவதின் அவசியமும் இப்போது உணரப்படுகிறது.
இன்னும் இந்த உலகம் மோசமாகிக் கொண்டே தான் இருக்கப் போகிறது. நமது குழந்தைகளை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்...
அவர்களது எதிர்காலம் நமது கைகளிலும் இருக்கிறது...
வெட்கப்படவேண்டிய செய்தி. இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்வதைப் பார்க்கும்போது அதனை இழைப்போரின் வக்கரத்தை உணரமுடிகிறது.
பதிலளிநீக்குநல்ல தொடுகை, கெட்ட தொடுகையை கத்து கொடுத்து என்ன பிரயோஜனம்?! உடல் வளர்ச்சியடையாத சிறுமி(வர்)யால் தன்மேல் விழும் எருமைமாடுகளை என்ன செய்ய முடியும்?!
பதிலளிநீக்குமாற்றம் ஆண் மனதில் வரனும். பெண் போகப்பொருள் இல்லன்னு, அவள் அனுமதி இல்லாம தொடக்கூடாதுன்னு...
இதை அவன் வீட்டு பெண்கள் சொல்லி தரனும்.. அதான் முக்கியம்...
சமூகம் மாறனும். சமூகத்தோடு சட்டமும் மாற வேண்டிய நேரம் வந்திட்டுது.
அவன் பேத்தி வயது இருக்கும் குழந்தையிடம் ச்சை
பதிலளிநீக்குகேட்கும் போதே உடல் நடுங்குகிறது..
பதிலளிநீக்குதண்டணை கடுமையாகும் பொழுது இது போன்று நிகழ்வுகள் குறையும் என்றும் , அதே போன்று ஆண் பிள்ளைக்கும் பெண்களை பற்றிய புரிதலை சிறு வயது முதலே கற்பிக்க பழக {வேண்டும்
ஆனால் இன்றைய இயந்தி வாழ்க்கையில் உட்கார்ந்து பிள்ளைகளுடன் பேசுவதற்கு கூட நேரமில்லாமல் போய்விட்டது.
கேடு கேட்ட மனிதர்கள் ..இல்லை இல்லை மிருகங்கள்..
பதிலளிநீக்குஒவ்வொருமறை இச்செய்தியை காணும் போதும் மனம் நடுங்குகிறது...
மிகவும் அதிர்ச்சியையும்,வேதனையையும் ஏற்படுத்துகிற செய்தி. மற்ற தினசரி செய்திகளை போல இதை கடந்து செல்ல முடிவதில்லை. அந்த குழந்தையை நினைத்து மனம் வலிக்கிறது.நம் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளின் பாதுகாப்பை எண்ணி ஒரு வித அச்ச உணர்வு ஏற்படுகிறது.
பதிலளிநீக்குIvarkal seitha velaikku maranathandanaithan kodukka vendum .seruppal adirgu ilurhu sella vaendum porikkikal
பதிலளிநீக்கு