வெள்ளி, 4 நவம்பர், 2016

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது விழா அழைப்பிதழ்

நண்பர்களுக்கு வணக்கம் ,

எனது ஆதிமுகத்தின் காலப்பிரதி கவிதைத் தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து வழங்கும் சிறந்த கவிதை நூலுக்கான கே.சி.எஸ் அருணாசலம் நினைவு விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.



ஆதிமுகத்தின் காலப்பிரதி எனது மூன்றாவது கவிதை நூல். இரண்டாவது கவிதை நூலான பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு நூலுக்கு உலகத் தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் சிறந்த இளம் படைப்பாளருக்கான விருது கிடைத்தது. முதல் தொகுப்பான பொம்மைகளின் மொழி கவிதை நூலுக்கு இளம் இந்தியா அமைப்பு வழங்கிய சிறந்த இளம் எழுத்தாளருக்கான விருது கிடைத்தது.

தமிழ் நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் நவம்பர் பன்னிரண்டாம் தேதி , மாலை ஐந்து மணிக்கு , புதுக்கோட்டையிலுள்ள நகர்மன்றத்தில் நடைபெற இருக்கிறது.
இத்துடன் அழைப்பிதழை இணைத்துள்ளேன் ..



விருது பெறும் தருணம், நண்பர்களின் அருகாமை தான் விருதின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன். வாய்ப்புள்ள நண்பர்கள் நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டுகிறேன். சந்திக்கலாம்.

புதுக்கோட்டை எனக்கு நெகிழ் நிலம் ... அவ்விடத்தில் விருது விழா ஏற்பாடானது மனதை இன்னும் நெகிழச் செய்கிறது.

உடன் இருக்கும், இருக்கப்போகும் நண்பர்களுக்கு எனது நன்றியும் மனம் நெகிழ் ப்ரியங்களும். நண்பர்களால் தான் சாத்தியமாகிறது எத்துயரிலிருந்தும் மீள வருதல்.

உடன் விருது பெறும் எழுத்தாளர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்...

7 கருத்துகள்:

  1. தோழமைக் கவிஞருக்கு வாழ்த்துகள். தாங்களும் என் தோழர்களும் -முக்கியமாக உதயசங்கர்- விருதுபெறும் நேரம் உடனிருக்க ஆவல்கொண்டிருந்தேன். ஆயினும் அதே நேரம் மதுரையில் புதியகல்விக் கொள்கை எதிர்ப்புக் கருத்தரங்கம்... நான் பேசப்போகிறேன் எனினும் என் இனிய வாழ்த்தை இதன்வழி வழங்கிச் செல்கிறேன். தாங்கள் பெறும் இதே -கவிதைக்கான- விருதை எனது “புதிய மரபுகள்” நூலுக்காக 1993இல் எட்டயபுரம் பாரதி இல்ல வாசலில் நடந்த தகஇபெம விழாவில் பெற்றேன் என்பதை மகிழ்வோடு நினைவுகூர்கிறேன். வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா வணக்கம், தங்களைச் சந்திப்பேன் என ஆவலாயிருந்தேன். பார்க்கலாம். தங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி

      நீக்கு
  2. வாழ்த்துக்கள் அண்ணா.. மிக்க மகிழ்ச்சி..:)

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள், பாராட்டுகள்

    உங்கள் பதிவுத் தலைப்பையும் இணைப்பையும் இக்குழுவில் இணையுங்க...
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    பதிலளிநீக்கு