ஞாயிறு, 29 ஜனவரி, 2017

தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் 2016ஆம் ஆண்டுக்கான வளரும் படைப்பாளர் விருது

தேனியில் தோழர் விசாகன் பொதுச்செயலாளராக இருந்து சிறப்புடன் இயங்கி வரும்
தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின்  2016ஆம் ஆண்டுக்கான வளரும் படைப்பாளர் விருது எனக்கும் அறிவித்திருக்கிறார்கள். மிக்க மகிழ்ச்சி. 
உடன் விருது பெறும் சக படைப்பாளர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்...

இதில் கூடுதல் மகிழ்ச்சி என்னவெனில் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்துக்கு மூன்று விருதுகள் என்பது. எனக்கு, கவிஞர் ஆன்மன் மற்றும் கவிஞர் யாழ் தண்விகா ( விஜயராஜ் காந்தி ) என மூன்று பேருக்கு இந்த விருது கிடைக்கப்போவது பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் பயணத்தில் ஒரு முக்கிய நிகழ்வு.

மேலும் விருதுகள் பெறும் சக படைப்பாளர்கள் அனைவரும் நண்பர்கள் என்பது மட்டற்ற மகிழ்வு...

பிப்ரவரி 25 அன்று மாலை தேனியில் விருது விழா... நண்பர்களைச் சந்திக்கவிருப்பதில் மகிழ்ச்சி...10 கருத்துகள்: