எப்போதாவது ஆயிரம் கரங்கள் நீளும்
அதிகாரத்துக்கு எதிராகவோ
ஆபத்தில் அரவணைக்கவோ,
எப்போதாவது ஆயிரம்
கண்களில் கண்ணீர் மல்கும்
சக உயிர்களின் மீதான
வன்முறைக்கும் வலிகளுக்கும்
எப்போதாவது போல
இப்போது ஆயிரம் கொம்புகள் முளைத்திருக்கின்றன
நமக்கு.
உரிமையை மீட்கவும்
உணர்வைக் காட்டவும்
நமக்கும் கொம்புகளுண்டென
அவர்கள் அறிந்து கொண்டார்கள்;
நாமும்.
இனி அநீதிக்கெதிராகவும்
அடக்குமுறைக்கெதிராகவும்
அவ்வப்போது முளைக்கட்டும்
நம் கொம்புகள்
அதிகாரத்துக்கு எதிராகவோ
ஆபத்தில் அரவணைக்கவோ,
எப்போதாவது ஆயிரம்
கண்களில் கண்ணீர் மல்கும்
சக உயிர்களின் மீதான
வன்முறைக்கும் வலிகளுக்கும்
எப்போதாவது போல
இப்போது ஆயிரம் கொம்புகள் முளைத்திருக்கின்றன
நமக்கு.
உரிமையை மீட்கவும்
உணர்வைக் காட்டவும்
நமக்கும் கொம்புகளுண்டென
அவர்கள் அறிந்து கொண்டார்கள்;
நாமும்.
இனி அநீதிக்கெதிராகவும்
அடக்குமுறைக்கெதிராகவும்
அவ்வப்போது முளைக்கட்டும்
நம் கொம்புகள்
அருமை
பதிலளிநீக்குஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) பற்றிய
பதிலளிநீக்குதீர்வு கிட்டும் வரை
எழுச்சி ஓயப்போவதில்லையாம்...
காலம் பதில் சொல்லுமே!
உண்மை...
பதிலளிநீக்குஅவ்வப்போது முளைக்கட்டும்
நம் கொம்புகள்...
அருமையான வரிகள்..