வியாழன், 20 ஏப்ரல், 2017

குழந்தைகள் கலைக்கொண்டாட்டம் 2017

அன்புடையீர் வணக்கம்,

நமது பொள்ளாச்சியில் இளம் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், முன்னணி இலக்கிய ஆளுமைகளை வருங்காலத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையிலும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் துவங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை இலக்கிய சந்திப்பு நடைபெற்று வருகிறது

மேலும் ஒவ்வொரு வருடமும் மே மாதம் குழந்தைகள் கலைக் கொண்டாட்டம் என்ற நிகழ்வை முழு நாள் நிகழ்வாக ஒருங்கிணைக்கிறோம்.. வரும் மே மாதம் 21 ஆம் தேதி சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான முழு நாள் கலை நிகழ்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்நிகழ்வில் கீழ்க்கண்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும்

 • சிறுவர்களுக்கான கதை சொல்லல்
 • சிறுவர்களின் கதை சொல்லல்
 • பொம்மலாட்டம்
 • தொலைந்து போன கிராமத்து விளையாட்டுகள் அறிமுகம்
 • சிறுவர்களை ஓவியம் வரையச் செய்தல்
 • சிறுவர்களுக்கான இசை நிகழ்ச்சி
 • நாடகம்
 • விடுகதை
 • பாடல் இன்னும் பல...


இந்நிகழ்ச்சிக்கு தங்கள் குழந்தைகள் மற்றும் தங்கள் அருகில் உள்ள குழந்தைகளை அழைத்து வரலாம். அனுமதி இலவசம். மேலும், குழந்தைகளுக்கு கதைப்புத்தகங்கள் , உபகரணங்கள், பரிசுகள் வழங்கப்படும். மதிய உணவும் வழங்கப்படும். இந்நிகழ்ச்சிக்கு குறைந்த அளவே குழந்தைகளை வைத்து நடத்தும் திட்டம் உள்ளதால், முன் பதிவு அவசியம். குழந்தைகளின் வயது வரம்பு : 4 வயது முதல் 13 வயது வரை
விருப்பமுள்ளவர்கள், கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்பு எண்கள் : .அம்சப்ரியா - 90955 07547, இரா.பூபாலன் - 98422 75662

சென்ற வருட நிகழ்வின் சில நல்ல தருணங்கள் :


7 கருத்துகள்:

 1. “குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுவதை விட்டு,
  குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறோம்?” எனும் அப்துல் ரகுமான் கவிதை நினைவுக்கு வருகிறது. அருமையான முயற்சி தோழர்களே! சிறக்க நடக்க வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. இவ்வாறான நிகழ்வுகள்
  என்றும் தேவையான ஒன்றே!

  பதிலளிநீக்கு