சனி, 28 ஏப்ரல், 2018

இன்றைய தினமணி கலாரசிகன் பகுதியில் எனது கவிதை

இன்றைய தினமணி நாளிதழில் கலாரசிகன் எனது ஆதிமுகத்தின் காலப்பிரதி தொகுப்பிலிருந்து ஒரு கவிதையைக் குறிப்பிட்டுள்ளார்.

பகிர்வதில் மகிழ்கிறேன்


வேலியோர 
முட்புதருக்குள் வீறிட்டழும்
சிசுவிற்கு
யாரிடத்தும் யாதொரு
புகாரும் இல்லை
அதன் அழுகையெல்லாம்
முலை அமிழ்ந்து
கிடைக்கும்
ஒரு மிடறு
பாலுக்காகத்தான்

- ஆதிமுகத்தின் காலப்பிரதி

கலாரசிகன் அவர்களுக்கு நன்றி.. எனது முதல் தொகுப்பான பொம்மைகளின் மொழி, இரண்டாவது தொகுப்பான பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு, மூன்றாவது தொகுப்பான ஆதிமுகத்தின் காலப்பிரதி என மூன்று தொகுப்புகளையும் தினமணியில் அறிமுகம் செய்து இருக்கிறார்...


8 கருத்துகள்:

  1. கலாரசிகன் அறிமுகப்படுத்திய தங்கள் "ஆதிமுகத்தின் காலப்பிரதி" கவிதை சிறப்பாய் அமைந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  2. தினமணியில் வந்த நாளன்றே பார்த்தேன். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு