புதன், 30 செப்டம்பர், 2015

பதுங்கு குழியில் துளிர்க்கும் செடி

பதுங்கு குழியில் துளிர்க்கும் செடி

இப்போது எதுவுமே
இல்லை அவ்வீதிகளில்.

சிதிலமடைந்து துளைத்த
குண்டுகளின் அடையாளங்களுடன்
நிற்கும் வீடுகள்
நாளை சரித்திரக்
கதைகளுக்கு சான்றாகலாம்.

நிசப்தம் மட்டுமே
நிலவியிருக்கும்
முன்பு ஊராயிருந்த
அவ்வூர் இனி
மயானமாக உபயோகப்படலாம்.

தெருவெங்கும் இலக்கியமாகவும்
கவிதையாகவும் மணந்த
மூவாயிரமாண்டு மூத்தமொழி
எதிர்காலத்தில்
தொல்பொருள் துறையால்
தோண்டியெடுக்கப்படலாம்.

ரத்தமும் , கண்ணீரும்
இன்னும் ஈரம் காயாமலிருக்கும்
பதுங்கு குழியின் ஆழத்திலிருந்து
இப்போதும்
துளிர்க்கிறது ஒரு செடி.

நாளைகளின் மீது
நம்பிக்கையுடன்...


_________________________


இப்படைப்பு எனது சொந்தப்படைப்பு.“வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” இது , இதற்கு முன் வெளியான படைப்பல்ல என்றும் முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன்.

போட்டி வகைமை : புதுக்கவிதை ; எண் : 4

29 கருத்துகள்:

  1. இரண்டாவது பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. போட்டியில் இரண்டாமிடம் பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. வெற்றி பெற்றமைக்கு புதுகை பதிவர் விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் சந்திப்பு போட்டியில் வெற்றி பெற்ற உங்களுக்கு எனது மனமார்ந்தவாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. மின்-தமிழ் இலக்கியப்போட்டியில் பங்கு பெற்று பரிசினை வென்ற தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. புதுக்கவிதைப்போட்டியில் வெற்றிபெற்றமைக்கு புதுகைபதிவர்விழாகுழுவின் சார்பில் வாழ்த்துக்கள்சகோ.

    பதிலளிநீக்கு
  7. அன்புள்ள அய்யா,

    இரண்டாம் பரிசு பெற்றதற்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வெற்றி பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. போட்டியில் வெற்றி பெற்றமைக்கு இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துகள் நண்பரே! வெற்றிகள் தொடரட்டும்!!!

    பதிலளிநீக்கு