செவ்வாய், 22 செப்டம்பர், 2015

எனக்குப் பிடித்த என் கவிதைகள் சில...

மகாபாரதம் இதிகாசமானது
பகவத்கீதை வேதமானது
கண்ணன்அர்ச்சுனன் அனைவரும்
கடவுளானார்கள்
எல்லாம் சரி
கூட்டம் கூட்டமாக
வெட்டிக்கொண்டும்
குத்திக்கொண்டும்
செத்துப்போன சிப்பாய்கள்
என்ன ஆனார்கள்?

______________________

பொம்மைகளின் மொழி

குழந்தைகளின் மொழி
அம்மாக்களுக்கு மட்டுமே
புரிவது போல

பொம்மைகளின் மொழி
குழந்தைகளுக்கு மட்டுமே
புரிகிறது

______________________

சின்னதாகத்தான் ஆரம்பித்தேன்
எனினும்
துளைகள் கிடைத்த
நிலங்களனைத்திலும்
தன் வேர் பரப்பி
நீண்ட நெடிய கிளைகளுடன்
ஓங்கி வளர்ந்துவிட்டன
என் பொய்கள்

______________________

வரம் தருகிறேனென்று
வருகின்ற
கடவுள்களால் தான்
கலைக்கப்படுகின்றன
என் தவங்கள்

___________________

ஏதாவதொன்றைத்
தேடும்போது கிடைத்துவிடுகிறது
நான் 
எப்போதோ தேடிய ஒன்று


- எனது முதல் தொகுப்பான " பொம்மைகளின் மொழி" நூலிலிருந்து

4 கருத்துகள்:

  1. **கூட்டம் கூட்டமாக
    வெட்டிக்கொண்டும்
    குத்திக்கொண்டும்
    செத்துப்போன சிப்பாய்கள்
    என்ன ஆனார்கள்?**
    அவர்கள் என்ன ஆனார்களோ தெரியவில்லை!! ஆனால் அவர்களது பேரன்கள் தான் இன்று முகபுத்தகத்தில் அரசியல்வாதிகளுககவும், நடிகர்களுக்காகவும், சாதிக்காகவும் கருத்தாயிதம் ஏந்தி வெட்டிக் கொண்டிருகிறார்களாம்:)) ஒவ்வொரு கவிதையும் வெவ்வேறு அழகு!!

    பதிலளிநீக்கு
  2. சிப்பாய்கள்
    என்ன ஆனார்கள்?
    கவிதை மிகவும் பிடித்திருக்கிறது!

    பதிலளிநீக்கு