புதன், 29 பிப்ரவரி, 2012

கடவுளின் கதை

 
 
 
 
 
சிவப்பு விளக்கெரியும்
சாலை சந்திப்புகளில்
பிச்சை எடுக்கிறார்கள்
கடவுள்கள்.
 
பதினாறாம் வய்ப்பாட்டைத்
தலைகீழாய் ஒப்புவிக்கச் சொல்லி
பிரம்படி வாங்குகிறார்கள்.
 
பாதி கட்டி முடிக்கப்பட்ட
ஒரு கட்டிடத்தில்
வன் புணர்வு கொண்டு
சீரழிக்கப் படுகிறாள்
ஒரு கடவுள்.
 
பொம்மையை
வைத்திருந்த கடவுளின் கையில்
பிடிவாதமாகத் திணிக்கப் படுகிறது
தலையணையொத்த புத்தகங்கள்.
 
பாத்திரங்கள் கழுவவும்
சமையலைக் கற்றுக் கொள்ளவும்
கட்டாய வகுப்பெடுக்கிறார்கள்
பெண் கடவுள்களுக்கு மட்டும்.
 
இழி மனிதர்களின்
தேசத்தில்
வதைக்கப்பட்டு
சிறகுகளை முறித்துக்
கொண்டு
மனிதர்களாகவே
வளர்ந்து விடுகிறார்கள்
கடவுளாய்ப் பிறந்த
குழந்தைகள்.
 

1 கருத்து:

  1. நான் சரியாக வாய் பேசமுடியாமல் இருந்தேன்.தினமும் கடவுளை நினைத்து கொள்வேன்.நான் வாய் பேசினால் உலகில் முடியாதவர்களுக்கு உதவுவேன். இப்போது நான் நன்றாக பேசிகொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு