வியாழன், 20 டிசம்பர், 2012
வியாழன், 13 டிசம்பர், 2012
திங்கள், 10 டிசம்பர், 2012
கருந்துளை - சிற்றிதழ்
நண்பர்களின் உந்துதலாலும், உதவியாலும், கருந்துளை வெளியாகி விட்டது. நிறைய இடங்களுக்கு சென்று சேர்ந்து விட்டது. அனைத்துப் பக்கங்களிலிருந்தும் ஆதரவுக் குரல்களும், அனுதாபக் குரல்களும், பாராட்டுக்களுமாக வந்து கொண்டிருக்கிறது.
தீராத அலுவல் வேலைகளினாலும், தேர்வுகள் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்ததாலும் முழு வீச்சாக இதழ் பணிகளில் இயங்க முடியாத போதும் நண்பர்ௐகளின் உதவியால் இதழ் முழுமையாக வந்திருப்பது மிகுந்த மன மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
நண்பர்கள் தொடர்ந்து நன்கொடை, சந்தா என்று இப்போதே தங்களது அன்பைத் தந்து கொண்டிருக்கிறார்கள்.
முதல் இதழ் சற்று தாமதமாக வந்துள்ளது. நண்பர்கள்,விமர்சகர்கள் அனைவருக்கும் இதழ் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.
இதழ் வேண்டுவோர் எனது எண் 9842275662-ஐ தொடர்பு கொள்ளலாம்.
அடுத்த இதழுக்கான வேலைகள் இப்போது துவங்கி விட்டன. நண்பர்கள் தங்கள் படைப்புகளை உடனே அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இதழ் முகவரி : கருந்துளை,எண்-8,ராசா மில் சாலை,பொள்ளாச்சி
மின்னஞ்சல் : karundhulai@gmail.com
அன்பு கூர்ந்து நண்பர்களுடன் இச்செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சிற்றிதழ் நடத்துவதின் அவசியங்களையும், அதை தொடர்ந்து இயக்குவதின் சிரமங்களையும் உணர்ந்து நீங்கள் எங்கள் இலக்கியப் பணி தொடர வாழ்த்தி உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்..
- இரா.பூபாலன்

திங்கள், 12 நவம்பர், 2012
வெள்ளி, 9 நவம்பர், 2012
தீபாவளி
மிகுந்த சத்தங்களுடனும்
ஆரவாரங்களுடனும்
அதீத வலியுடனுமே
வந்திருக்கிறது ...
வழக்கமாக
வெளியில் ஒலிக்கும்
சத்தங்கள்
சந்தோஷம் தரும்.
இம்முறை
அணுகுண்டுகளும்
ஆயிரம் வாலாக்களும்
வெடித்துக் கொண்டிருப்பது
மனதுக்குள்.
சிவகாசியில் வெடி விபத்து
ஈழத்துக் கண்ணீர்
என எல்லாம் சேர்ந்து
நெஞ்சை அழுத்த
எதைக் கொண்டாடுவது..?
வியாழன், 18 அக்டோபர், 2012
செவ்வாய், 9 அக்டோபர், 2012
செவ்வாய், 2 அக்டோபர், 2012
கருந்துளை - சிற்றிதழ்
நண்பர்களுடன் இணைந்து கருந்துளை என்ற சிற்றிதழ் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். அறிமுக அறிக்கையை இத்துடன் இணைத்துள்ளேன்.
முதல் இதழ் உருவாகி வருகிறது. கவிதைகள்,கட்டுரைகள்,விமர்சனங்கள் என உங்கள் படைப்புகளை உடனடியாக கொடுக்கப் பட்டுள்ள முகவரிக்கோ அல்லது கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பவும்.
உங்கள் தொடர்பு எண்,முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரியை மறக்காமல் குறிப்பிடவும்.
ஞாயிறு, 9 செப்டம்பர், 2012
வியாழன், 14 ஜூன், 2012
வியாழன், 31 மே, 2012
வியாழன், 5 ஏப்ரல், 2012
வெள்ளி, 30 மார்ச், 2012
கவன ஈர்ப்பு
எத்தனை முக்கியமான
வேலையில்
மும்முரமாக
இருந்தாலும்
நிமிர்ந்து பார்க்க
வைத்து விடுகிறது
கடந்து போகும்
கொலுசுச் சத்தம்
புதன், 21 மார்ச், 2012
என் புன்னகை
செவ்வாய், 20 மார்ச், 2012
திங்கள், 12 மார்ச், 2012
ரத்த தேசம்
நமது இனம் இன்னும் எத்தனை கொடுமைகளைத் தாங்கும்..?
நமது சகோதர சகோதரிகள் வன்கொடுமைக்கு ஆளாவதையும்,
சிதறுண்டு சாவதையும் எப்படி சகிப்பது..?
http://thaaitamil.com/?p=11947
எதுவுமே செய்யாத எல்லாரையும் காலம் கவனித்துக்கொண்டே இருக்கிறது. நாளைய வரலாற்றில் நம்
பெயர்கள் துரோகிகளாகவும்,கையாலாகாதவர்களாகவும்
பதியப்படும்.
புத்த தேசம்
ஆனது
ரத்த தேசம்.
புன்னகை - கவிதை இதழில் வெளியான எனது கவிதை:
கவிதையை எழுத
நினைக்கையில் அங்கு
அறுத்தெறியப் படுகின்றன
சில மார்பகங்கள்...
குழந்தையின் புன்னகையை
கவிதைப் படுத்த நினைக்கையில்
அங்கே புதைக்கப்படுகின்றன
பல குழந்தைகளின் கடைசிப்
புன்னகைகள்...
பூக்களை எழுதலாம் என்றால்
சாம்பல் காடுகளே
எஞ்சியிருக்கின்றன..
எதைப்பற்றியும்
எழுதவியலாமல் கடைசியில்
கடவுளைப் பற்றி எழுத
நினைக்கையில் அங்கு
குண்டு சத்தங்களுக்கு பயந்து
கருவறையை
காலி செய்துகொண்டு
ஒடி விட்டாராம் கடவுள்....
கடவுளே இல்லாத ஊரில்
யாரிருக்கிறார் இப்போது..?
புதன், 7 மார்ச், 2012
மகளிர் தின வாழ்த்துக்கள்.
நீயும் என் அன்னை
சொல்லியழ முடியாத
என் உள் வலியை
உன்னிடம் சொல்லாமலே
புரிந்து கொண்டு
தேற்றுகிறாய் என்னை.
இதன் காரணமாகவே
சொல்கிறேன் - நீயும்
என் அன்னை என்று.
திங்கள், 5 மார்ச், 2012
கவிதைகள்
புதன், 29 பிப்ரவரி, 2012
கடவுளின் கதை
புதன், 22 பிப்ரவரி, 2012
செவ்வாய், 21 பிப்ரவரி, 2012
புதன், 15 பிப்ரவரி, 2012
திங்கள், 13 பிப்ரவரி, 2012
ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012
வெள்ளி, 3 பிப்ரவரி, 2012
அழுகை
ஓவெனக் கதறி
அழுவதைக் காட்டிலும்
அதிகம் வலிப்பது
சத்தமில்லாமல் அழுவது.
அதனினும் அதிகம்
வலிப்பது
கண்களில் நீர் வராமல்
அழுவது.