செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

ஆழி சூழ் கேரளத்துக்கு அன்பு சூழ நிதி...

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் சார்பில் கேரளத்துக்கு நிதி மற்றும் பொருள் உதவி சேகரித்து வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 19 இலக்கிய வட்ட நிகழ்வில் வழங்கலாம் என அறிவித்திருந்தோம்.

கடுமையான பணிச்சூழல் காரணமாக நிறைய நாட்கள் முன்னர் கடலூர் வெள்ளத்தின் போது செய்தது போல அலைய முடியவில்லை என்றாலும் நண்பர்கள் ஒரே நாளில் தங்களால் இயன்றவற்றைக் கொடுத்து உதவிவிட்டனர்.

அறிவிப்பை வாட்சப், முகநூலில் கண்ட நண்பர்களும் இலக்கிய வட்டத்துக்கு வந்திருந்த நண்பர்களும் சேர்ந்து கிட்டத்தட்ட 40000 ரூபாய்க்கு மேல் பணமும் பொருளுமாக அனுப்பி விட்டனர்.

நிதி திரட்டுகிறோம் என்று கேள்விப்பட்டவுடன் முதல் ஆளாக எனது கல்லூரி நண்பன் பாலமுருகன் பெங்களூரிலிருந்து 15000 தந்து உதவினான், பின்னர் இலக்கிய வட்ட நண்பர் முரளிகிருஷ்ணன் 5000 தந்து உதவ, கவிஞர் அன்பாதவன், அருள்செல்வி, உமாமகேஸ் என தொடர்ந்து நண்பர்கள் பணமாகக் கொடுத்தனர். பணம் கொடுத்தவர்களின் விபரம் கீழே கொடுத்துள்ளேன்.


பெயர் தொகை

பாலமுருகன் ( பெங்களூரு ) 15000.00

முரளிகிருஷ்ணன் 5000.00

செ.கார்த்திகா 500.00

செ.ரமேஷ்குமார் 1000.00

பொள்ளாச்சி அபி 1000.00

தமிழரசன் ( சே தமிழா ) 2000.00

அருள் செல்வி 1000.00

சிவசங்கரி 200.00

ஆனந்தகுமார் 100.00

த.வாசுதேவன் 1000.00

மயிலவன் 500.00

திருமால் ( சுக்கு காபி ) 200.00

பொள்ளாச்சி முருகானந்தம் 500.00

உமா மகேஸ் 1000.00

நாச்சிமுத்து 500.00

நிமோஷினி 100.00

கார்த்தி 500.00

செல்வக்குமார் 100.00

க.மாசிலாமணி 100.00

சி.செல்வராஜ் 200.00

ச.ப்ரியா 500.00

சீனிவாசன் 200.00

கெளரி 500.00

ஷைல்தேவ் 50.00

அன்பாதவன் 2000.00

ஆறுமுகம் ஆசிரியர் 500.00

ரகுபதி 500.00

மெளனம் ரமேசு 500.00

சி.நா.மலையப்பன் 420.00

ரங்கராஜ் 2000.00

செல்வராஜ் 100.00

மொத்தம் 37770.00
வசூலான தொகை 37770 ரூபாய்க்கு என்ன வாங்கலாம் என ஆன்மன், இனியன் போன்ற நண்பர்களிடம் விசாரித்ததில் இடுக்கி முகாமுக்கு சில பொருட்கள் தேவை என சொன்னார்கள். கீதா ப்ரகாஷிடம் பட்டியல் கேட்டு வாங்கி 38000 ரூபாய்க்கு பொருட்களை வாங்கி எதிர் வெளியீடு அனுஷ் மூலமாக கேரளாவுக்கு இன்று பொருட்கள் செல்கின்றன.

பணமாக உதவியது போகவும்,

கவிஞர் ச.ப்ரியா மெழுகுவர்த்தி,ப்ளீச்சிங்க் பவுடர் மற்றும் மளிகைப் பொருட்கள் கொண்டு வந்து தந்தார், மேலும் அபிநயா அவர்களிடமிருந்தும் மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டு வந்தார்.

தோழி அஸ்வினி அவர்கள் என்ன வேண்டும் எனக் கேட்டு  மெழுகுவர்த்தி,ப்ளீச்சிங்க் பவுடர் மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டு வந்து தந்தார்,

திருமதி மாரியம்மாள் அவர்கள் தனது கணவருடன் வந்து ஒரு அரிசிப்பை தந்துவிட்டுச் சென்றார்.

திருமதி கல்பனா அவர்கள் வேட்டி சேலைகள் வாங்கித் தந்திருந்தார்.

நகரவை ஆண்கள் மேனிலைப்பள்ளி பொருளியல் ஆசிரியர். திருமதி அம்பிகா அவர்கள் பொருட்களாக உதவிகளை செய்தார்கள்.

இப்படியாக அத்துணை பொருட்களும் இன்று சென்று சேரும். இவ்வாறு பொதுக் காரியத்தில் ஈடுபடும் போது சில நெகிழ்ச்சியான சம்பவங்கள் நேரும், நமக்கும் அது நேர்ந்தது

- இலக்கிய வட்டத்துக்கு சுக்கு காபி தரும் திருமால் அண்ணன் நமது அறிவிப்பைக் கேட்டு நம்மிடம் சுக்கு காபி விற்ற பணத்தில் ரூபாய் 200ஐத் திருப்பி நம்மிடமே தந்து இதை வெள்ள நிவாரண நிதியா வச்சுக்கோங்க என்று சொல்லிவிட்டுப் போனார்.

- ச.ப்ரியாவின் மகன் ஷைல் தேவ் தான் சேமித்து பத்திரப்படுத்தி வைத்திருந்த ஒரு புத்தம் புதிய ஐம்பது ரூபாய் நோட்டை வெள்ள நிவாரண நிதியாக அளித்தார்.

 - பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் கவிதை வாசிப்பவர்களில் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு கவிதைகளுக்கு தலா 100 ரூபாய் வீதம் நமது பொள்ளாச்சி இலக்கிய வட்ட ஆலோசகர் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தந்து வருகிறார். இந்த மாதம் கல்லூரி மாணவன் செல்வக்குமார் மற்றும் ஆசிரியர் செல்வராஜ் அவர்களின் கவிதைகள் தேர்வாகின. அவர்கள் இருவரும் பரிசாகப் பெற்ற அந்தத் தொகையை அப்படியே திருப்பி நிவாரணமாகக் கொடுத்துவிட்டனர்.

பொள்ளாச்சி அபி, நாச்சிமுத்து,மயிலவன், செ.இரமேஷ்குமார் உட்பட இங்கு பணமாகக் கொடுத்த பலரும் ஏற்கனவே வெவ்வேறு இடங்களில் உதவியிருந்தாலும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் மூலமாகவும் தங்களது உதவி போய்ச் சேர வேண்டும் என விரும்பி அளித்துள்ளனர்.

கவிஞர் அம்சப்ரியா அவர்களும், கவிஞர் சோலைமாயவன் அவர்களும் தாம் இவற்றைச் சேகரித்து கொண்டு போய்ச் சேர்த்தார்கள். சோலைமாயவன் பொள்ளாச்சியில் எங்கு யார் பொருட்களைச் சேகரித்து வைத்திருந்தாலும் தனது சொந்த வாகனத்தில் அவற்றைத் தூக்கி வந்து அனுஷ் அல்லது கீதா ஆகியோரிடம் சேர்த்திருக்கிறார். அவர் அப்படித்தான்.

பணமாகவும், பொருளாகவும், உடல் உழைப்பாகவும், மன ஆறுதலாகவும், ஆலோசனைகளாகவும் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்துக்கும் அதன் மூலம் கேரள சகோதரர்களுக்கும் உதவிய தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியும் , நெகிழ்ந்த அன்பும் ...


ஆழி சூழ் கேரளத்தை அன்பு சூழ மீட்டெடுப்போம் 

1 கருத்து:

  1. பொள்ளாச்சி இலக்கிய வட்டம் இதுபோன்ற பணிகளை எல்லா நல் உள்ளங்களையும் ஒருங்கிணைத்து முன்னெடுத்து செல்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு